ஒரே நேரத்தில் நான்கு பந்துகளைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தைக்காரரை சர்க்கஸில் பார்த்தான் அந்தச் சிறுவன். “உங்கள் பந்துக்கள் விழவே விழாதா?” என்றான். அவர் சொன்னார். எப்போதாவது ஒன்றிரண்டு பந்துகள் கைநழுவும். ஆனால் தரையில்
விழுந்த வேகத்தில் மேலே என் கைக்கு வரும் விதமாய் எம்பும். எனவே மற்றவற்றில் கவனம் செலுத்த என்னால் முடிகிறது”. ஒரே நேரம் பலவற்றைசெய்யலாம். ஒன்றில் ஏற்படும் பின்னடைவு மற்றவற்றை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.


